பொதுமக்கள் கடும் அவதி திருவாரூரில் பல்லாங்குழியாக மாறிய மருத்துவக்கல்லூரி சாலை

மன்னார்குடி, நவ.23: திருவாரூரில் பல்லாங்குழி சாலையாக மாறிய அரசு மருத்துவக்கல்லூரி சாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி உள்ளது. இம்மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் ஆம்புலன்சுகள் என நூற்றுக்கணக்கான வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்நிலையில், இம்மருத்துவமனையின் முன்புற கேட்டிலில் இருந்து மருத் துமவனைக்கு செல்ல போடப்பட்ட சாலை போதிய பராமரிப்பின்றி ஆங்காங்கே குண்டும் குழியும் ஏற்பட்டு பல்லாங்குழி சாலையாக மாறிக்கிடக்கிறது.

மேலும், மாவட்ட மருத்துவமனை துவக்கப்பட்டு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட நிலையில் கட்டிடங்களின் வெளி தோற்றம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் மருத்துவமனை வளாகத்தை சுற்றி பள்ளங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதன்முலம் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி சாலையை புதிதாக சீரமைத்து கட்டிடங்களில் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: