×

விபத்தில் சிறுமி பலி லாரி டிரைவர் கைது

கெங்கவல்லி, நவ.22:  கெங்கவல்லி பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ். லாரி டிரைவரான இவரது மகள் சுவேதா(10). இவர் நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரி சிறுமி மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே பலியானாள். விபத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலத்தை சாலையில் வைத்து, உறவினர்கள் தம்மம்பட்டி-வலசக்கல்பட்டி பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், விபத்தை ஏற்படுத்தி தப்பிய டிரைவரை கைது செய்வோம் என உறுதி கூறினர். இந்நிலையில், நேற்று விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரான வேப்பந்தட்டையைச் சேர்ந்த பெரியசாமி மகன் அருண்குமார் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : lorry driver ,accident ,
× RELATED லாரி டிரைவர் வீட்டில் 16 சவரன், 66 ஆயிரம்...