×

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை கலெக்டர், எஸ்பி ஆய்வு இ-டிக்கெட் இல்லாத 3 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

திருவண்ணாமலை, நவ.21: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் தீபத்திருவிழா முன்னேற்பாடுகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முதல் நடந்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் நடைமுறையை பின்பற்றி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி, எஸ்பி அரவிந்த் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்களுக்கு முறையாக உடல் வெப்ப பரிேசாதனை செய்ய வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.மேலும், வெப்ப அளவீடு கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அடிக்கடி சரிபார்க்க வேண்டும், முதியவர்கள், சிறுவர்களை அனுமதிக்க கூடாது. அதேபோல், வரிசையில் செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி செல்வதை கண்காணிக்க வேண்டும் என்றார்.

மேலும், வரும் 28ம் தேதி வரை இ-டிக்கெட் பெறும் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவதை போல, முன்பதிவு இல்லாமல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதை தவிர்க்க, 3 ஆயிரம் பக்தர்கள் இ-டிக்கெட் இல்லாமல் அனுமதிக்கப்படுவார்கள். முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், இ-டிக்கெட் இல்லாத 3 ஆயிரம் பேரை முறையாக அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து, தீபத்திருவிழாவின் நிறைவாக தெப்பல் உற்சவம் நடைபெற உள்ள பிரம்ம தீர்த்த குளத்தை கலெக்டர் பார்வையிட்டார். மேலும், தரிசன வரிசை, சுவாமி வீதியுலா நடைபெறும் 5ம் பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

Tags : Collector ,devotees ,SP ,Thimalai Annamalaiyar Temple ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...