தண்டையார்பேட்டை, நவ.10: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் இருந்து கடந்த 8ம் தேதி காலை 10.30 மணிக்கு வேல் யாத்திரை தொடங்கும் என பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க பாஜ மாநில தலைவர் எல்.முருகன் கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நிர்வாகிகளுடன் திருவொற்றியூர் புறப்பட்டார். அப்போது, ராயபுரம் கல்மண்டபம் வழியாக மத்திய சென்னை மாவட்ட பாஜ தலைவர் விஜய் ஆனந்த்தும் அங்கு வந்துள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்தபோது போலீசார் மீது மோதுவதுபோல் கார் ஓட்டியுள்ளார்.