ராம்கோ ஐடிஐ முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சி துவக்கவிழா

ராஜபாளையம், நவ. 9:  ராஜபாளையத்தில் உள்ள ராம்கோ ஐடிஐயில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி துவக்க விழா சமூக இடைவெளியுடன் துவங்கப்பட்டது. தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மாடசாமி வரவேற்றார். ராஜபாளையம் மில் லிமிடெட் தலைமை நிதிஅலுவலர் ஞானகுரு பயிற்சியை தொடங்கி வைத்தார். ராம்கோ கல்வி குழுமங்களின் தலைமை கல்வி அலுவலர் டாக்டர் வெங்கட்ராஜ் பேசுகையில், அதிக அனுபவம் உள்ள  பயிற்றுனர்களால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல விருதுகளை ராம்கோ ஐடிஐ பெற்றுள்ளது. மத்திய அரசால் சர்வீஸ் ப்ராடக்ட் மூலம்  ரூ.2 கோடி நிதியுதவி கிடைத்துள்ளது. அதனால் பயிற்சி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு மற்றும் தரம் மேலும் உயர்ந்துள்ளது என்று கூறினார். பயிற்சி அலுவலர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related Stories: