கொரோனா பாதிப்பு எதிரொலியால் ஐயப்பா சேவா சங்கத்தின் சபரிமலை யாத்திரை ரத்து மாலை அணியவும் தடை

அறந்தாங்கி, நவ.3: கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை ரத்து என அறந்தாங்கி ஐயப்பா சேவா சங்கம் அறிவித்துள்ளது. அறந்தாங்கி ராஜேந்திர சோழீஸ்வரர், அய்யப்பன் கோவிலில் ஐயப்பா சேவா சங்கத்தின் மூலம் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சபரிமலை சீசனில் 4 முறை பக்தர்களை சபரிமலைக்கு யாத்திரை அழைத்து செல்லப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா பரவலால் சபரிமலை அய்யப்பன் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சபரிமலை செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு பல கட்டுப்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விதித்துள்ளதால், பக்தர்கள் சபரிமலை யாத்திரை செல்வது இயலாத காரியமாக உள்ளது. இதைத் தொடர்ந்து அறந்தாங்கி ஐயப்பா சேவா சங்கம் சார்பில் இந்த ஆண்டு அய்யப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிப்பதில்லை என்றும், இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்களை அழைத்து செல்வதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பல ஆண்டுகளாக யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: