×

விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கல்

விருத்தாசலம், அக். 30:       விருத்தாசலத்தில் நடந்த திருமண விழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசாக வழங்கினர்.  வடமாநிலங்களில் தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் இறக்குமதி இல்லாததால் தமிழகம் முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ சின்ன வெங்காயம் சுமார் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெங்காயம் கிடைக்காத சூழ்நிலையில் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேற்று விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

அப்போது உறவினர்கள், நண்பர்கள் பரிசு பொருட்கள் மற்றும் மொய் பணத்தை புதுமணத் தம்பதியினருக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அவரது நண்பர்கள் சிலர் ஒரு பரிசுப் பொருள் பெட்டியை தம்பதியினருக்கு பரிசாக வழங்கினர். உடன் அதனை அங்கேயே பிரிக்கச் சொல்லி பார்த்தபோது அதில் இரண்டு கிலோ வெங்காயம் இருந்தது. இதனை புதுமணத் தம்பதியினர் மற்றும் திருமண விழாவிற்கு வந்த அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்து வியந்தனர். புதுமண தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசாகக் கொடுத்த இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

Tags : Vriddhachalam ,wedding ceremony ,
× RELATED ரூ.100க்கு மேல் விற்கப்பட்ட பெரிய வெங்காயம் விலை குறைந்தது