மாஸ்க் அணியாதவர்கள் ஊருக்குள் நுழைய தடை

ஆத்தூர், அக்.22:  ஆத்தூர் நகராட்சி பகுதிக்குள் மாஸ்க் அணியாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், விதி மீறிய 25 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து, கூட்டுத்தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாஸ்க் அணியாமல் நகராட்சி பகுதிக்குள் நுழைபவர்களை கண்காணித்து வருகிறார்கள். இப்பணிகளை கோட்டாட்சியர் துரை, டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன், தாசில்தார் அன்புசெழியன், நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி, நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, மாஸ்க் அணியாமல் நகரப்பகுதிக்குள் நுழைந்த 25 பேரிடம் தலா ₹200 வீதம் அபராதம் வசூலித்தனர். மேலும், அவர்களுக்கு மாஸ்க் வழங்கியதோடு, இனி நகரப்பகுதிக்குள் வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி கூறுகையில், ‘ஆத்தூர் நகராட்சி பகுதிக்கு பல்வேறு பணிகளுக்காக, தினசரி ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் மாஸ்க் அணியாமல் வருபவர்களை நகராட்சி எல்லைக்குள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆத்தூர் நகரப்பகுதிக்கு வருவோர் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறார்கள்,’ என்றார்.

Related Stories:

>