பழங்குடி மக்களை சந்தித்து குறைகளை கேட்ட கலெக்டர்

போடி, அக்.21: போடி அருகே பழங்குடி மக்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். போடி அருகே அணைக்கரைப்பட்டி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட  பகுதியான மேலப்பரவில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று இக்கிராமத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பழங்குடி மக்கள் தங்களுக்கு தேவையான வளர்ச்சிப் பணி, அடிப்படை வசதிகள் பற்றி எடுத்துக் கூறினர். விரைவில் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். இதில் மாவட்ட வனத்துறை அதிகாரி கௌதம், மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: