சாலை வரியை ரத்து செய்ய கோரி சுற்றுலா வாகனங்களை ஆர்டிஓ ஆபீசில் ஒப்படைக்கும் போராட்டம் காரைக்காலில் பரபரப்பு

காரைக்கால், அக்.21: கொரோனா காலத்தை கருத்தில்கொண்டு, காரைக்கால் சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகனங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு, கூட்டமைப்பின் தலைவர் கோபு தலைமை வகித்தார். போராட்டத்தில் ஏராளமான ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, கொரோனா காலத்தில் சுற்றுலா வாகனங்கள் இயங்காமல் இருப்பதால் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி அரசு, சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரி உடனடியாக கட்ட வேண்டுமென உத்தரவைப் பிறப்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது. அண்டை மாநிலமான தமிழகத்தில் இந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரி அரசும் உடனே சுற்றுலா வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வாகனங்களின் சாவியை வட்டார போக்குவரத்து துறை அதிகாரியிடம் ஒப்படைக்க சென்றனர், அதை அவர் அவாங்க மறுத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியடைந்ததையொட்டி, வட்டார போக்குவரத்து அலுவலக வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: