×

இடஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கோரி மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, அக்.20: அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில், மருத்துவ கல்வியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு, தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். மேலும், ஏழை விவசாயி குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசு பள்ளிகளை நம்பியே உள்ளனர்.

எனவே, அரசு பள்ளிகளை நம்பியுள்ள மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இந்த சட்டத்தின் மூலம் ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியிருந்தனர்.

Tags : Candlelight demonstration ,governor ,
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து