காரைக்குடி, அக்.20: காரைக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் பாதாளசாக்கடை திட்ட பணிகள் குறித்து நகராட்சி, நெடுஞ்சாலை துறை, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், திட்ட ஒப்பந்தகாரர்கள் ஆகியோருடன் கேஆர்.ராமசாமி எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார். இதில் பாதாள சாக்கடை திட்ட பணியின் தாமதத்திற்கு காரணம். பொதுமக்கள் வியாபாரிகள் சிரமப்படுவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் முடிந்த பகுதிகளில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும். பழமையான சிமென்ட் சாலையை சேதப்படுத்தாமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ தெரிவித்தார்.