வள்ளியூர் அருகே கண்ணநல்லூரில் நம்பியாற்றின் குறுக்கே ரூ.4 கோடியில் தடுப்பணை

பணகுடி, செப். 30: வள்ளியூர் அருகே வறண்ட பூமியான கண்ணநல்லூர் பகுதியில் நிலத்தடி நீரை மேம்படுத்தி குடிநீர் வசதிகளை பெருக்கவும், விவசாய பாசனத்திற்காகவும் உடனடியாக நம்பியாற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வந்தனர். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றக்கோரி இன்பதுரை எம்எல்ஏ சட்டபேரவையில் தொடர்ந்து வலியுறுத்தினார்.இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணநல்லூரில் நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த மார்ச்சில் ரூ.4 கோடியில் தடுப்பணை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதைதொடர்ந்து தடுப்பணை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை இன்பதுரை எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நம்பியாற்றில் கட்டப்படும் 5வது தடுப்பணையால் கண்ணநல்லூர், துலுக்கர்பட்டி, சியோன்மலை, ஆனைகுளம் போன்ற கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, இப்பகுதிகளிலுள்ள நூற்றுக்கணக்கான கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும். மேலும் கண்ணநல்லூர், ஆனைகுளம், மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 404 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி உறுதி செய்யப்படும். இந்த ஆய்வின் போது அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோனி அமலராஜா, வள்ளியூர் சொசைட்டி தலைவர் முருகேசன், பொன்செல்வன், சந்திரசேகர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மூர்த்தி, உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், அதிமுக நிர்வாகிகள் தங்கவேலு, கல்யாணசுந்தரம் சந்திரமோகன், செல்லப்பாண்டியன், அருண்குமார் மற்றும் ஒப்பந்ததாரர் ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: