×

வேளாண் சட்ட மசோதாக்களை கண்டித்து மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி பங்கேற்பு

சேலம், செப்.29:மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாக்களை கண்டித்து, சேலம் மேற்கு மாவட்ட திமுக தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து கட்சியினர் பங்கேற்றனர். மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்ட மசோதாக்களை கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில், இடைப்பாடி பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி தலைமை வகித்தார். இதில், வாழைக்கன்று, கரும்பு, நிலக்கடலை, பருத்திச்செடி, நெற்பயிர் ஆகியவற்றுடன் கலந்து கொண்ட, அனைத்து கட்சி நிர்வாகிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். அப்போது மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி பேசுகையில், “விவசாயிகள், விவசாய ெதாழிலாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை திரும்ப பெறும்வரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி போராட்டங்கள் தொடரும்,” என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், திமுக நகர செயலாளர் பாஷா, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகன், திக பாலு, விசிக அய்யாவு, கொமதேக ராஜ்குமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், இளைஞரணி மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு சரவணமூர்த்தி, சிபிஐ ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் லோகநாதன், காங்கிரஸ் அசோக்குமார், ஆதித்தமிழர் பேரவை ஸ்ரீதர், மமக முஹம்மது ரைஸ்,  நகர இளைஞரணி செந்தில்குமார், நிர்வாகிகள் மாதையன், வடிவேலு, தங்கவேலு, சிங்காரவேலு, ராமலிங்கம், ராஜமாணிக்கம், ரவி, மணி, நெடுஞ்சேரலாதன், ரவி, ராணி உள்பட திமுக கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல சித்தூர், கொங்கணாபுரம், எட்டிகுட்டை மேடு, பூலாம்பட்டி என 22 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Demonstration ,DMK ,Western District ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி