கடலாடி பகுதிக்கு புதிய திட்டங்கள்

சாயல்குடி, செப்.25:  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு, புதிய திட்டப்பணிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வந்திருந்தார். அப்போது ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் காவிரி-குண்டாறு இணைக்கும் பணி ஜனவரியில் தொடங்கப்படும். கடலாடி அருகே ஏ.உசிலங்குளம் குரூப் கூரான்கோட்டை பகுதியில் குண்டாறு(மலட்டாறு) குறுக்கே மழை தண்ணீரை சேமிக்க தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார்.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் கடலாடி பகுதியில் உள்ள குண்டாறு(மலட்டாறு) பாசன விவசாய நிலங்கள், நூற்றுக்கணக்கான கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகள் பயனடையும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்

கும். இதனால் விவசாயம் பொய்க்காது, குடிநீர் தட்டுப்பாடு வராது. கிடப்பில் கிடக்கும் ரூ.675 கோடி மதிப்பிலான சாயல்குடி அருகே குதிரைமொழி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றார். இதனால் கடலாடி ஒன்றியத்திலுள்ள 60 பஞ்சாயத்துகளில் குடிநீர் தட்டுப்பாடு வராது.

Related Stories: