×

கெங்கவல்லியில் திமுக உறுப்பினர் சேர்க்கை துவக்கம்

கெங்கவல்லி, செப்.25: சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம் அறிவுறுத்தலின்படி, கெங்கவல்லி பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர் அகிலன் தலைமையில், பேரூர் பொறுப்பாளர் பாலமுருகன் முன்னிலையில், “எல்லோரும் நம்முடன்” திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கெங்கவல்லி தொகுதியில் உள்ள இளைஞர், மகளிர்கள் திமுக கட்சியில் புதிய உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய இலக்கிய அணி கலைஞர் தாசன், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் ஜெகதீஷ் பாபு, முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சிட்டிபாபு, இளைஞரணி செல்வர் கிளின்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Kengavalli ,
× RELATED மேலகூட்டுடன்காட்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை