×

முதல்வர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் மாற்றம் கட்சி தலைமை அறிவிப்பு

சேலம், செப்.25: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அதிமுகவில் மாவட்டம் வாரியாக புதிய நிர்வாகிகள் நியமனத்தை கட்சியின் தலைமை அறிவித்து வருகிறது. அதன்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான சேலம் மாவட்டம் இடைப்பாடியில் அதிமுகவின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பு: சேலம் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்கள், எடப்பாடி வடக்கு ஒன்றியம், எடப்பாடி தெற்கு ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி ஆகியவற்றின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்களாக கருணாநிதி, நாகராஜன் நியமிக்கப்படுகின்றனர். எடப்பாடி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மாதேஸ், அவைத்தலைவர் கருப்பண்ணன், இணைச்செயலாளர் சந்திரகலா, துணைச்செயலாளர்கள் ஆராயி, சேட்டு (எ) வெங்கடாசலம், பொருளாளர் சுப்பிரமணி புதிதாக நியமிக்கப்படுகின்றனர்.

எடப்பாடி வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய செயலாளர் யுவராஜ், மகளிரணி ஒன்றிய செயலாளர் ஜோதி, மாணவரணி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், சிறுபான்மையினர் நலப்பிரிவு ஒன்றிய செயலாளர் சிலுவைபிரகாஷ், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், மீனவர் பிரிவு ஒன்றிய செயலாளர் தமிழசன் நியமிக்கப்படுகின்றனர்.
எடப்பாடி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் துரை (எ) மாதேஸ்வரன், அவைத்தலைவர் இளங்கோவன், இணைச்செயலாளர் வளர்மதி, துணைச்செயலாளர்கள் கஸ்தூரி, பாலகிருஷ்ணன், பொருளாளர் தேவராஜன், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் அசோக், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் முத்துக்கண்ணு, எம்ஜிஆர் இளைஞரணி ஒன்றிய செயலாளர் ஜெயபால், மகளிரணி ஒன்றிய செயலாளர் ரேவதி, மாணவரணி ஒன்றிய செயலாளர் கண்மணி ராஜா, விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் ராமு நியமிக்கப்படுகின்றனர்.

பூலாம்பட்டி பேரூராட்சி அதிமுக செயலாளர் ஜெயராமன், அவைத்தலைவர் சிவக்குமார், எம்ஜிஆர் மன்ற செயலாளர் கோவிந்தன், அம்மா பேரவை செயலாளர் கோவிந்தராசு, நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மாணிக்கவேல், அவைத்தலைவர் ரமேஷ், நங்கவள்ளி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வம், அவைத்தலைவர் ராஜி, கொங்கணாபுரம் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் கோவிந்தன், அம்மா பேரவை செயலாளர் செல்வராஜ், நங்கவள்ளி பேரூராட்சி  அம்மா பேரவை செயலாளர் யுவராஜா நியமிக்கப்படுகின்றனர். நங்கவள்ளி பேரூராட்சி 4வது வார்டு செயலாளர் ஜெயபால், வனவாசி பேரூராட்சி 10வது வார்டு செயலாளர் ஞானசேகரன், 11வது வார்டு செயலாளர் செல்வராஜ், 12வது வார்டு செயலாளர் யுவராஜ் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.   

Tags : AIADMK ,leadership change ,Chief Minister ,party leadership announcement ,
× RELATED அதிமுக-வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை...