×

நிலத்தடி நீரை மாசுபடுத்தும் சலவை ஆலையை மூடக்கோரி மனு

திருப்பூர், ஆக.21:நிலத்தடி நீரை மாசுப்படுத்தும் சலவை ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருப்பூர் அடுத்த மங்கலம் அக்ரஹாரப்புதூரில் இயங்கி வரும் ஒரு சலவை ஆலை, சாயக்கழிவுநீரை விவசாய நிலம் மற்றும் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் விட்டது. இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ஆைலயின் மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பிறகும் அந்த ஆலை நிர்வாகம் மீண்டும் அதை தவறை செய்துள்ளது. இதனால், அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.  இருப்பினும், சீல் அகற்றப்பட்டு ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது. விவசாய நிலத்தையும், கிணற்றையும் மாசுப்படுத்தும் நோக்கில் அந்த ஆலை செயல்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் கெட்டுப்போனால் அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே அந்த சாய ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்