×

வைக்கோல் விலை கடும் உயர்வு

சின்னசேலம், மார்ச் 20: கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் சாகுபடி செய்து அதனை அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல் தவிர வைக்கோலை அதிக விலைக்கு வெளியூர் வியாபாரிகள் விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதி கால்நடை விவசாயிகளுக்கு போதிய வைக்கோல் கிடைப்பதில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழை பெய்ததில் அணை, ஏரி, குளம் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் விவசாயிகள் அதிகளவில் சம்பா நெல் சாகுபடி செய்து வந்தனர். கல்வராயன்மலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது அறுவடை காலம் என்பதால் நெல் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்த நெல் போக வைக்கோலை வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் சென்று வெளி மாவட்டங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு 2,500 முதல் 3,000 வரை விலை நிர்ணயம் செய்து விவசாயிகள் வாங்கி வந்த நிலையில் வியாபாரிகள் ரூ.4,000 முதல் 5,000 வரை அதிக விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். கூலி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, வெளி மாவட்டங்களில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு நெல் அறுவடை செய்யப்படுகிறது. மேலும் வைக்கோல்களும் அதே இயந்திரங்கள் மூலம் உருளையாக கட்டப்படுகிறது. இந்த இயந்திரங்
களுக்கு 1 மணி நேரத்துக்கு 2,500 ரூபாய் அல்லது ஒரு உருளை கட்டுவதற்கு ரூ.40 வீதம் வரை விவசாயிகள் வாடகை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவும், வைக்கோல் கட்டு ஒன்று சுமார் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கால்நடை விவசாயிகள் மாடுகளுக்கு வைக்கோல் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். மழை இல்லாததால் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை.
வைக்கோல் கிடைப்பது மிக கஷ்டமாக உள்ளது. விலை அதிகமாக உள்ளதால் வாங்க வழியில்லாமல் உள்ளோம். விவசாயம் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. கால்நடைகளை வைத்து பிழைப்பு நடத்தலாம் என நினைத்தோம். அதுக்கும் தீவனம் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர். த்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED வெங்காயத்தின் விலை உயர்வைத்...