×

சாணிப்பூண்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது

வேட்டவலம், மார்ச் 20: வேட்டவலம் அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில் நடந்த கோமாரி நோய் தடுப்பு முகாமில் 250 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. வேட்டவலம் அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கோமாரி நோய் தடுப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடை மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சரளா, செல்வி, வெங்டேசன், சுப்ரமணி மற்றும் கருவூட்டல் பயிற்சியாளர் வேலு, ஆகியோர் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்தி, 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முடிவில் ஊராட்சி துணை தலைவர் உண்ணாமலை சுந்தரவேலு நன்றி கூறினார். வேட்டவலம் அடுத்த சாணிப்பூண்டி கிராமத்தில் நடந்த கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் தடுப்பூசி போடப்பட்டது.

Tags : village ,Gomari ,Sanipundi ,immunization camp ,
× RELATED செங்குன்றம் அருகே சாலையில் திரியும்...