×

9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

வேலூர், மார்ச் 20: பேரணாம்பட்டு நகராட்சியில் 9வது வார்டு மறுவரையறை செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பேரணாம்பட்டு நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 9வது வார்டு (பழைய) காசிம் வீதி, சப்தர் வீதி, ஆச்சாரி வீதி, சுப்பையா வீதி என 11 தெருக்கள் கொண்ட வார்டாக செயல்பட்டு வருகிறது. இந்த வார்ட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், ஜெயின் சமூகத்தினர் உள்ளனர். பேரணாம்பட்டு பேரூராட்சியாக உருவான நாள் முதல் இன்று வரை நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.

இந்நிலையில் 11 தெருக்கள் கொண்ட இந்த வார்டை அப்படியே இருந்திருந்தால் எங்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால் இந்த வார்டை எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் வார்டு மக்கள் கருத்துக்கு இடம் தராமல் வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. திடீரென வார்டு கலைக்கப்பட்டு மாதிரி வரைவு பட்டியல் வெளியிட்டுள்ளார்கள். இதனால் இனி வரும் காலங்களில் பண்டிகை நாட்களிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் விதமாக அமைந்துள்ளது. எனவே பழையபடி 9வது வார்டில் உள்ள வாக்காளர்கள் கருத்துக்களை அறிந்து வார்டு எல்லை வரையறை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags : Anti-Collector's Office ,9th Ward ,
× RELATED அதிமுக-பாமகவினர் மோதல்: திண்டிவனத்தில் பரபரப்பு