×

திருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி

திருவண்ணாமலை, மார்ச் 19: திருவண்ணாமலை அருணகிரிபுரத்தை சேர்ந்தவர் முருகன்(55). இவர் திருவண்ணாமலை-திருக்கோயிலூர் சாலையில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இவர் ஒரு ஜேசிபி வாகன டயருக்கு பஞ்சர் ஒட்டி உள்ளார். பின்னர், அந்த டயருக்கு காற்று பிடித்து கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் டயர் வெடித்தது. இதில் முருகன் தூக்கிவீசப்பட்டு முகம் மற்றும் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvannamalai ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே டயர்...