×

தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவி

தண்டராம்பட்டு, மார்ச் 19: தண்டராம்பட்டு அருகே தீ விபத்தில் வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.தண்டராம்பட்டு அடுத்த ரெட்டியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளின் 2 குடிசை வீடுகள் மின்கசிவு காரணமாக நேற்று முன்தினம் எரிந்து சாம்பலானது. இதனால், வீடு இழந்த குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் நேற்று ₹10 ஆயிரம், அரிசி, துணிகள் மற்றும் காய்கறிகளை மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் லட்சுமணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அறவாழி, இளைஞரணி மாவட்ட தலைவர் அருள், மாவட்ட துணைத் தலைவர் ராமநாதன், மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் தேவன் மற்றும் கட்சியினர்நிவாரண உதவிகள் வழங்கினார்.


Tags :
× RELATED தெலுங்கானாவில் காதல் திருமணம் செய்த...