×

தேசிய துயர்துடைப்பில் நாட்டு நலப்பணித்திட்டம் தளராமல் பணிகளை ஆற்றும்

செய்யாறு, மார்ச் 19: தேசிய துயர்துடைப்பில் என்எஸ்எஸ் தளராமல் பணிகளை ஆற்றும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறினார்.செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம் செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தில் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. அதன் நிறைவு விழா நேற்று முன்தினம் நடந்தது.கல்லூரி முதல்வர் ஆ.மூர்த்தி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பூங்காவனம் அரங்கநாதன், துணைத்தலைவர் அஞ்சலி செல்வம், விஏஓ பரமேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.இதில் திருவள்ளுவர் பல்கலைக்கழக என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் கே.ரவிச்சந்திரன், முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:இந்த கிராமத்தில் நடந்த சிறப்பு முகாமில் மாணவ, மாணவிகள் சாலைகளை தூய்மைப்படுத்தியும், நீர்நிலைகளைப் பராமரித்தும், வீதிகள் தோறும் மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்த செயலையும், தூய்மை பராமரிப்பு செயலையும் மனதார பாராட்டுகிறேன்.

மேலும், இன்றைக்கு உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாடகங்கள் வாயிலாக கிராம மக்களுக்கு எடுத்துக் கூறிய செயல் மிகவும் பாராட்டதக்கது. தேசிய துயர்துடைப்பு காலங்களில் நாட்டு நலப்பணித்திட்டம் அளப்பரிய பணியை மேற்கொண்டு வருகிறது.சுனாமி, பெருவெள்ளம் போன்ற காலங்களில் என்எஸ்எஸ் மாணவர்கள் மகத்தான சேவையை செய்து வருகிறார்கள். இன்றைக்கு தொல்லியல் துறையை வியக்கும் வகையில் சமண, பவுத்த, சைவ, சமய நினைவு சின்னங்களையும் சிறப்பு முகாம் பணியில் கண்டுபிடித்திருப்பது வியக்கத்தக்கது.என்எஸ்எஸ் மாணவர்கள் தங்களை முழுமூச்சுடன் அர்ப்பணித்துக் கொண்டு அயராமல், தளராமல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் மாரிமுத்து, தேவி, திருமால், தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கவுரவ விரிவுரையாளர்கள் சிவக்குமார், திருஞானசம்பந்தன், குணாநிதி, உலகநாதன், கஜேந்திரன், மோகன், பிரகாஷ், தபசு, முத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : country ,
× RELATED மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற...