வியாபாரம் செய்வது போல் நடித்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள வைர கற்கள் அபேஸ்: ஒருவர் கைது; மூவருக்கு வலை

தண்டையார்பேட்டை:  இலங்கையைச் சேர்ந்தவர் முகமது முஷ்மில் (42),  வைர வியாபாரி. இவர் இலங்கையில் இருந்து  கடந்த மாதம் 26ம் தேதி வைர வியாபாரம் செய்ய  சென்னை மண்ணடி வந்து, மூர் தெருவில் உள்ள ஒரு மேன்சனில் தங்கி உள்ளார். அப்போது 4 பேர் முகமதுவிடம்  வைர கற்களை வாங்க வந்துள்ளனர். அங்கு, முகமதுவிடம் விலை உயர்ந்த வைர கற்கள் இருந்துள்ளதை பார்த்துள்ளனர். வைர கற்களை வாங்கி பார்ப்பது போல் பார்த்துவிட்டு, நூதன முறையில் ₹10 லட்சம் மதிப்புள்ள வைர கற்களை அபேஸ் செய்து சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பிறகு முகமது தன்னிடம் இருந்த வைர கற்களை பார்த்தபோது மாயமானது தெரிந்தது.  இதுகுறித்து முகமது முஷ்கில் வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது முகமதுவிடம் வைர கற்களை அபேஸ் செய்தது சென்னை ஏழுகிணறு மொட்டை மேஸ்திரி தெருவைச் சேர்ந்த சுபேர் முகமது (33) என்பது தெரியவந்தது. அவரை நேற்று அவரை கைது செய்து, அவரிடமிருந்து ₹2 லட்சம் மதிப்பிலான வைரக்கற்கள், ₹50 ஆயிரத்தை  பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை  சிறையில் அடைத்தனர்.

மேலும், ₹7 லட்சம் மதிப்பிலான வைர கற்களுடன் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: