சென்னை: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் பணம் பிறத்த ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் போரூரில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக உடல் பயிற்சிக்கு சென்று வருகிறார். அப்போது, ஜிம் மாஸ்டர் அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர், இந்துவை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுக சிறுக லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும், இருவரும் பல இடங்களுக்கு ெசன்று நெருக்கமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.