ஓசூர் அரசு ஐடிஐயில் மகளிருக்கு குறுகிய கால தையல் பயிற்சி

ஓசூர்,  மார்ச் 13:  ஓசூர் அரசு ஐடிஐயில் தையல் மற்றும் பின்னலாடை குறித்த குறுகிய கால பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓசூர் அரசு ஐடிஐ உதவி இயக்குநர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தையல் மற்றும் பின்னலாடை குறித்த குறுகிய கால பயிற்சி, அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக மகளிர் பயன்பெறும் வகையில் 40 காலி இடங்களுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 18 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட பள்ளி படிப்பு முடித்தவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகிய அனைவரும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் மூன்று மாதகால பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம். பயிற்சி முடித்த அனைவருக்கும் நிறுவனங்களில் உடனடியாக வேலைவாய்ப்பிற்கு ஏற்பாடு செய்யப்படு–்ம. பயிற்சியின் முடிவில் தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி, விண்ணப்பக் கட்டணம் ₹50 மற்றும் சேர்க்கை கட்டணம் ₹100 மட்டுமே. தகுதியுள்ள, விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் மற்றும் நகலுடன் வரும் 20ம் தேதி(வெள்ளிக்கிழமை) வரை அலுவலக வேலை நாட்களில் ஓசூர் அரசினர் ஐடிஐ துணை இயக்குநரை நேரில் அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு துணை இயக்குநர் ரவி தெரிவித்துள்ளார்.

Related Stories: