எழிலகத்தில் கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலகம் வளாகத்தில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நில அளவுத்துறை என பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இரவில் எழிலக வளகாகம் முழுவதும் உள்ள நுழைவாயில் மூடப்பட்டு செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு சொந்தமான கட்டுமான பொருட்கள் வைக்கும் அறை  உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த அறையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே இருந்த அலுமினிய பொருட்களை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

ஆனால் பூட்டை உடைக்க முடியாததால், அறையின் முன்பு வைத்திருந்த அலுமினிய பொருட்களை மற்றும் கம்பிகளை மட்டும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்படி அண்ணாசதுக்கம் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து இரவு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் எழிலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

ரயில்களில் வரும் பார்சல்களை இறக்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் எழும்பூர் ரயில் நிலைய பார்சல் அலுவலக ஒப்பந்த ஊழியர் ராமச்சந்திரன் (45) என்பவரை தாக்கி, பீர் பாட்டிலால் அவரது மண்டையை உடைத்த சென்ட்ரல் ரயில் நிலைய பார்சல் அலுவலக ஊழியர் வேலு (30) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: