ஓசூரில் கோலாகலம் சந்திரசூடேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம்

ஓசூர், மார்ச் 10: ஓசூரில் சந்திரசூடேஸ்வரர் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் 3 மாநில பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மலைமேல் அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயிலின் தேரோட்டம் நேற்று நடந்தது. முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. விழாவில், கலெக்டர் பிரபாகர், ஆர்டிஓ குமரேசன், செல்லக்குமார் எம்பி, முன்னாள் எம்எல்ஏவும், சந்திரசூடேஸ்வரர் கோயில் கமிட்டி தலைவருமான கே.ஏ.மனோகரன், பாஜ மாநில தலைவர் நரேந்திரன், மாவட்ட தலைவர் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜூ, முன்னாள் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், ரஜினி மக்கள் மன்ற தலைவர் பாண்டி மற்றும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.  தேர்பேட்டை பகுதியில் உள்ள முக்கிய வீதிகளில் சென்றது. அப்போது பொதுமக்கள் பக்தி கோஷத்துடன் வாழைப்பழத்துடன் ஜவனா இலை, உப்பு, மிளகு  உள்ளிட்ட பொருட்களை தேர் மீது இறைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பானுடூல்ஸ் சரவணன், பத்திர எழுத்தர்  ஆனந்தய்யா, மூக்கண்டபள்ளி திரிலோக் எண்டர் பிரைசஸ் கிருஷ்ணப்பா, ப்ளவர்  ஆசோசியேசன் தலைவர் திம்மராஜ், செயலாளர் மூர்த்திரெட்டி, ஜிஎன்ஆர் எண்டர்  பிரைசஸ் ராமு, கற்பக விநாயகர் எண்டர்பிரைசஸ் சக்திவேல், தங்கம் பாலி பேக்ஸ்  உரிமையாளர் தங்கம் வெங்கடேஷ், டோட்டல் கேஸ் மற்றும் சூப்பர் கேஸ் ஏஜென்சி  பாபு, தொழில் அதிபர் சின்னராஜ், காங்கிரஸ் ஓபிசி மாவட்ட தலைவர் குமார், முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  ஓசூர் நண்பர்கள் குழு சார்பில்,  ஜலகண்டேஸ்வரர் கோயில் அருகில்  வெங்கடேசன், சக்திவேல், மஞ்சுநாத், அருண்குமார், மூர்த்திரெட்டி, ஜோதிவெங்கடேசன்,மோகன், செந்தில்  உள்ளிட்டோர் அன்னதானம் செய்தனர். இன்று ருத்ராபிஷேகம், மண்டப கட்டளை, ராவண வாகன உற்சவம் நடக்கிறது. நாளை வசந்த உற்சவம், தெப்ப உற்சவம், குதிரை வாகன உற்சவம் நடக்கிறது. தேர்திருவிழாவையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகளை ஓசூர் போலீசார் மேற்கொண்டனர்.

Related Stories: