×

இருதரப்பினர் மோதல் 4பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை, பிப். 28:  திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தைச்சேர்ந்த பிச்சாண்டி மகன் ரமேஷ்பாபு(43). அதே ஊரைச்சேர்ந்த தங்கவேல் மகன் சேகர்(47). இவர்கள் இருவரின் வீடும் அருகருகே அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு சாமி வீதியுலா செல்ல இருந்த நிலையில் அனைவரும் வீட்டின் வாசலை சுத்தம் செய்து கோலம்போட்டனர். அப்போது ரமேஷ்பாபுவின் மகள் வீட்டு வாசலை சுத்தப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது சேகர் மீது குப்பை பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரடைந்த அவர், ரமேஷ்பாபுவின் மகளை ஆபாசமாக திட்டி கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

அதை தட்டி கேட்ட ரமேஷ்பாபுவை சேகரும், அவரது மனைவி பிரியா(39)வும் சேர்ந்து ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பதிலுக்கு ரமேஷ்பாபுவும், அவரது மனைவி ராஜலட்சுமி(38)யும் சேர்ந்து சேகரையும், அவரது மனைவியையும் திட்டி, தாக்கியுள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து ரமேஷ்பாபு, சேகர் உள்ளிட்ட 4பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : conflict ,
× RELATED உ.பி. மாநிலத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி