×

வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

கடலூர், பிப். 28: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், தமிழகத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு அளிக்க கூடிய பயிற்சி  (INTERNSHIP TRAINING) வழங்கிட அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியானது ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் www. skilltraining.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன.மேலும் விவரங்களுக்கு கிண்டி தொழிற்பேட்டை ஆலந்தூர் சாலையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 044-22501002 / 22501006 / 22500900 (விரிவு 210,211)  என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இத்திட்டத்தின் மூலம் பயிற்சி வழங்க விருப்பம் உள்ள தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க நாளை(29ம் தேதி) கடைசி நாள் ஆகும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சென்னையில் இருந்து...