×

செய்யாறில் துணிகரம் சுகாதார பணியாளர் வீட்டில் 12 சவரன் திருட்டு

செய்யாறு, பிப். 27: செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா திருப்பனமூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர்(35). சுகாதார துறையில் ெகாசு ஒழிப்பு பணி ஊழியராக உள்ளார். இவரது மனைவி கோமதி, சிப்காட்டில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவியும் நேற்று காலை திருமண நிகழ்ச்சிக்கு நகைகள் அணிந்து செல்வதற்காக பீரோவை திறந்து பார்த்தனர். அப்போது பீரோவில் வைத்திருந்த 12 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து பீரோவை திறந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து மனோகர் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : health worker ,home ,
× RELATED பெரணமல்லூர் அருகே விவசாயி வீட்டில் 3.5 சவரன் திருட்டு