×

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முதல் கூட்டம்

தூத்துக்குடி, பிப்.27: தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முதல் கூட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முதல் கூட்டம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு தீர்மானங்கள் மீதான விவாதம் நடந்தது. கூட்டத்தில் திருச்செந்தூரில் நடந்த விழாவில் சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்படத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வாகனத்திற்கு கடந்த  நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதத்திற்கான எரிபொருள் நிரப்பிய பணம் ரூ.18,382, மாவட்ட பஞ்சாயத்து செயலர் அலுவலகத்திற்கு டெலிபோன் பில்கள் கட்டியது, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அறைக்கான பொருட்கள் வாங்கியது, மாவட்ட பஞ்சாயத்து அலுவலக டிரைவருக்கு 2600 ரூபாயில் மழை கோட் வழங்கியது, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்கு மின்கட்டணம் செலுத்தியது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் உறுப்பினர்கள் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,Thoothukudi District ,Panchayat ,
× RELATED சிறப்பு ஊராட்சி கூட்டம்