×

திருவண்ணாமலை நகராட்சியில் வரி வசூல் பெயரில் மிரட்டும் அதிகாரிள்

திருவண்ணாமலை, பிப்.26: திருவண்ணாமலை நகராட்சியில் வரி வசூல் என்ற பெயரில் மிரட்டும் அதிகாரிகளை வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் கண்டிப்பதாக அதன் மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார். திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. பெரிய, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறது. ஆனால், சிறு வணிகர்களுடைய கடன்களை, கந்து வட்டிக்காரர்கள் போன்று, ஆட்களை வைத்து மிரட்டி வங்கிகள் வசூலிக்கின்றன. இத்தகைய போக்கை மத்திய அரசும், மாநில அரசும் கண்டும் காணாமல் இருக்கிறது.

திருவண்ணாமலையில் நகராட்சியில் வரிவசூல் என்ற பெயரில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்காத வீடு, கடைகளுக்கு சென்று அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். மிரட்டுகிற தொனியில் நகராட்சி பெண் அதிகாரி ஒருவர் ஈடுபட்டுள்ளார். இதனை வணிகர் சங்க பேரமைப்பு கண்டிக்கிறது.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பில் வணிகர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம் கூறப்பட்டு உள்ளது. அதில் உள்நாட்டு வணிகத்தில் அமெரிக்கா தலையிடாது என்பது தான் அது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில துணைத்தலைவர் ராஜசேகரன், மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags : tax collectors ,municipality ,Thiruvannamalai ,
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு