×

சேரன்மகாதேவி ஸ்காட் கல்வி நிறுவன விளையாட்டு விழா

வீரவநல்லூர், பிப்.26: சேரன்மகாதேவி ஸ்காட் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா நடந்தது. சேரன்மகாதேவியில் ஸ்காட் கல்வி நிறுவனங்களான பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிறுவனம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கல்வியியல் கல்லூரி மற்றும் சர்வதேச பள்ளி சார்பில் விளையாட்டு விழா நடந்தது. நிர்வாக இயக்குநர் அருண்பாபு தலைமை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் ரூபஸ் வரவேற்றார். குழுமத்தலைவர் கிளிட்டஸ்பாபு வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்ற சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப், இந்திய கபடி அணி முன்னாள் வீரர் ஜீவகுமார், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பொது மேலாளர் இக்னேஷியஸ் சேவியர், வளாக துணை பொது மேலாளர் மணிமாறன், அனைத்து கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
Tags : Cheranmagadevi Scott Educational Institutional Sports Festival ,
× RELATED ஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு