×

தேர்தல் நடக்காததால் பேரூராட்சிகளில் வறுமைக்கோடு பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் உதவித்தொகை பெறுவோர் பாதிப்பு

உத்தமபாளையம், பிப். 21: தேர்தல் நடக்காததால் பேரூராட்சிகளில் வறுக்கோடு பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், அரசின் உதவித்தொகை பெறுவோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கோம்பை, தேவாரம், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, குச்சனூர், ஓடைப்பட்டி உள்ளிட்ட 22 டவுன் பஞ்சாயத்துக்கள் உள்ளன. இங்கு பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள் அதிகமாக வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். இந்நிலையில், பேரூராட்சிகளில் கணவரை இழந்த விதவைகள், ஆண்பிள்ளைகள் இருந்தும் துரத்தியடிக்கப்பட்ட வயதான பெரியோர், திருமணமே செய்யாத முதிர்கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் என அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த 8 வருடத்திற்கு முன்பே, உள்ளூரில் உள்ள வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ மூலம் பரிந்துரை பெற்று தாலுகா அலுவலகத்தில் உதவிதொகை ரூ.1000க்கு மனு கொடுத்துள்ளனர்.

ஆனால், இவர்களுக்கும் இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை.தினசரி உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்திற்கு நடை, நடையாய் நடக்கின்றனர். ஆனால், தகுதியானவர்களாக இருந்தும், அவர்களது விண்ணப்பங்களை கிடப்பில் போட்டுள்ளனர். இதற்கு காரணம் முதியோர் உதவிதொகை பெறுவதற்கு பேரூராட்சிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்க வேண்டும் என கூறுகின்றனர். கடந்த 2003ம் ஆண்டுக்கு பின்பு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் கிராமங்களில் நடந்து முடிந்துள்ள நிலையில் பேரூராட்சிகளுக்கு நடக்கவில்லை. எனவே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் பட்டியல் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ள்து.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், ‘கிராம ஊராட்சிகளில் தற்போது தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், வறுமைக்கோடு பட்டியல் தயாரிக்க முடிகிறது. இதற்கான தீர்மானமும் மிக எளிதாக நிறைவேற்றி விடுகின்றனர். ஆனால், பேரூராட்சிகளில் தேர்தல் நடக்காததால், அதிகாரிகள் தீர்மானம் போட்டு மாநில இயக்குநரிடம் அனுமதி பெறவேண்டும். அதிகாரிகள் இதை செய்வதில்லை. இதனால், ரூ.1000 உதவித்தொகை கூட வாங்க முடியாத நிலை உள்ளது’ என்றனர்.

Tags : elections ,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...