×

பூலாங்குளம் குயின்ஸ் பள்ளியில் முப்பெரும் விழா

நெல்ைல, பிப். 21: பூலாங்குளம் குயின்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 25வது விளையாட்டு விழா, பழைய மாணவர் சந்திப்பு, மற்றும் ஆண்டுவிழா நடந்தது. விளையாட்டு விழாவுக்கு பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை குயின்ஸ்மேரி  தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ரூபி வரவேற்றார். பூலாங்குளம்் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ஜூலியானா டெய்சிமேரி சிறப்புரை ஆற்றினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெங்காடம்பட்டி  தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் சரவணகுமார் பரிசு வழங்கினார். ஒட்டுமொத்த விளையாட்டுக்கான  கோப்பையை எமரால்டு அணியினர்  பெற்றனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

பழைய மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் 2001 முதல் 2012 வரை படித்த மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு மலரும் நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியை ஆசிரியை ஒலிவியா தொகுத்து வழங்கினார். ஆண்டுவிழாவுக்கு பூலாங்குளம் பஞ். முன்னாள் தலைவர் நவநீதசாமி தலைமை வகித்தார். டாக்டர் தர்மராஜ் முன்னிலையில் டாக்டர் அன்புமலர், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தங்கசுவாமி சிறப்புரையாற்றினார். பள்ளி முதல்வர் அருண் ஆண்டறிக்கை வாசித்தார். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு டாக்டர் அன்புமலர் பரிசு வழங்கினார். கல்விக்கான ஒட்டுமொத்த கோப்பையை டயமெண்ட் அணியினர் பெற்றனர். பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிர்வாகி செல்வராஜ் நன்றி கூறினார்.

Tags : ceremony ,Poolangulam Queen's School ,
× RELATED மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா