×

பெண்ணிடம் நகை பறிப்பு

அவிநாசி, நவ.21: திருப்பூர், ராஜ வீதியைச் சேர்ந்தவர் அபிபுல்லா(50), இவரது மனைவி விஜயலட்சுமி(49). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு அவிநாசியில் இருந்து திருப்பூருக்கு  இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவிநாசி வேலாயுதம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, இவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வேகமாக வந்த இரு நபர்கள் விஜயலட்சுமியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிக் கொடியைப் பறித்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்றனர். இது தொடர்பாக அவிநாசி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED வடம் பிடிப்பு இல்லை தொட்டியம் அருகே...