×

ரூ.7.74 லட்சத்திற்கு சூரியகாந்தி விதை ஏலம்

வெள்ளகோவில்,பிப்.21: வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில்  நடைபெற்ற ஏலத்தில் 7.74 லட்சம் ரூபாய்க்கு சூரியகாந்தி விதை ஏலம் போனது.திண்டுக்கல், கரூர், உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் 450 சூரிய காந்தி மூட்டை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில், தரமான சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.36.99 க்கும், குறைந்த பட்சமாக ஒரு கிலோ ரூ.31.35 க்கும் ஏலம் போனது. 22 ஆயிரத்து 197 கிலோ எடை கொண்ட சூரிய காந்தி விதைகள், ரூ.7லட்சத்து 74 ஆயிரத்து 220 க்கு ஏலம் போனது.

Tags :
× RELATED வெள்ளக்கோவில் விற்பனைக்கூடத்தில் ரூ.12...