×

வேதாரண்யம் வர்த்தக சங்கத்தில்

வேதாரண்யம், பிப்.21: வேதாரண்யம் வர்த்தக சங்கத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு அடையாளஅட்டை வழங்கும் விழா திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர், தென்னரசு தலைமை வகித்தார். வேதாரண்யம் வர்த்தக சங்க செயலாளர் சுபஹானி வரவேற்றார். விழாவில், 2019-20-ல் ஆண்டில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது. அம்பாள் ஜெயச்சந்திரன், மங்களதாஸ், லிங்கேஷ், முத்துக்குமார், சந்துரு, வெங்கடேஷ், முகமதுமீராசாகிப் மற்றும் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Vedaranyam Trade Association ,
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு