×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடையநல்லூரில் 2வது நாளாக தொடர் முழக்க போராட்டம்

கடையநல்லூர், பிப்.20:  தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், அந்த சட்டத்தை ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும்  கடையநல்லூரில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர் முழக்கப் போராட்டம் நடந்தது.  கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் நேற்று முன்தினம் முதல் 10 தினங்கள் தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் தொடர் முழக்கம் போராட்டம் நடந்து வருகிறது. இரண்டாவது நாளாக நேற்ற நடந்தது.  இதில் அனைத்துக் ஜமாத்தார்கள்,  இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : Kadayanallur ,
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...