×

கம்பத்தில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கம்பம், பிப். 19: கம்பம் நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் அதிகமாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். நகரில் கொசுத்தொல்லை அதிகரித்த நிலையில், நகராட்சி ஆணையாளர் கமலா உத்தரவின்பேரில், சுகாதார  அதிகாரி அரசகுமார் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தெருத்தெருவாக நகராட்சி வாகனங்கள் மூலம் கொசுவிற்கு புகை மருந்து தெளித்து வருகின்றனர். நகராட்சியில் கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு