×

அரிசி ஆலை சாம்பல் கழிவால் பாதிப்பு

காங்கயம், பிப். 19:  காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் அரிசி ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் சாம்பல் கழிவுகளால் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். இது குறித்து காங்கயம் நகராட்சி அய்யாச்சாமி நகர் காலனி பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டவர்கள், முன்னாள் கவுன்சிலர் மகேஸ்வரி தலைமையில், காங்கயம் நகராட்சி பொறியாளர் சரவணனிடம் அளித்து மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் நகராட்சி, பழைய கோட்டை ரோடு, அய்யச்சாமி நகர், குடிநீர் வடிகால் வாரிய நீருந்து நிலையத்திற்கு கிழபுறம் அமைக்கப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான ராட்சத அரிசி ஆலையில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றப்படும் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆலையிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளால் சுவாசக் கோளாறு மற்றும் கண்கள் பாதிப்படைகிறது. மேலும் அன்றாடப்பணிகளுக்கும், ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏற்கனவே மாவட்ட நிர்வாகம், வட்டாட்சியர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய இடங்களில் புகார் அளித்ததின் பேரில் தற்காலிக தீர்வு மட்டுமே பெற முடிந்தது. ஆனால் தற்போது மீண்டும் சாம்பல் கழிவு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. எனவே எங்கள் வாழ்வாதாரத்தை காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொரோனா வைரஸ் பாதிப்பை முன்கூட்டியே கணித்த கார்ட்டூன்கள்!!!