×

தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தெப்பக்குள உற்சவம்

தாரமங்கலம், பிப்.17: தாரமங்கலம் கைலாசநாதர் ேகாயிலில் தெப்பக்குள உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தாரமங்கலத்தில் கைலாசநாதர் கோயிலில் தைப்பூசத்தையொட்டி திருவிழா நடந்து வருகிறது. இதன்படி, திருவிழாவின் 12ம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு, தெப்பகுளத்தில் தேரோட்டம் நடந்தது. கோணக்கப்பாடி பருவதராஜ குல மீனவ சமுதாயம் சார்பில் நடந்த  இத்தேரோட்டத்திற்கு முன்னதாக, உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Tags : Taramangalam Kailasanathar Temple Theppakkula Festival ,
× RELATED வீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு