×

கலசபாக்கம் அருகே நெகிழ்ச்சி சம்பவம்கணவன் இறந்த அதிர்ச்சியில் உயிரை மாய்த்த மனைவி மரணத்திலும் இணை பிரியாத தம்பதி

கலசபாக்கம், பிப்.17: கலசபாக்கம் அருகே கணவன் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார். மரணத்திலும் இணை பிரியாத தம்பதியின் பாசம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த பட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(97). இவரது மனைவி வீரகங்கா(80). இவர்களது மகன் காளியப்பன்(60). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். காளியப்பனின் மகள் மகேஸ்வரி(30), அவரது கணவர் ஏழுமலை ஆகியோருடன் ஜெயராமன் தம்பதி வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயராமன் மற்றும் குடும்பத்தினர் உணவு சாப்பிட்டதும் வழக்கம்போல் தூங்க சென்றனர். நள்ளிரவு 1 மணியளவில் திடீரென எழுந்த ஜெயராமன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றபோது, வீட்டிலேயே உயிர் பிரிந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி வீரகங்கா மற்றும் மகேஸ்வரி உட்பட குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவலறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஜெயராமன் வீட்டிற்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.நள்ளிரவு 2 மணியளவில் கணவர் சடலம் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்த வீரகங்காவும் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், எழுப்ப முயன்றபோது அவரும் இறந்தது தெரியவந்தது.60 ஆண்டுகளுக்கும் மேலாக இணை பிரியாமல் வாழ்ந்த தம்பதி, மரணத்திலும் ஒன்றாக இணைந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நேற்று மாலை இருவரது சடலங்களையும் அவரது உறவினர்கள் ஒன்றாக அடக்கம் செய்தனர்.

Tags : Kalasapakkam ,elasticity incident ,
× RELATED நீதிபதி வீட்டில் திடீரென மயங்கி...