×

திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி-திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரத்து

நாகர்கோவில், பிப்.17: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு:
மதுரை கோட்டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெற இருப்பதால் வரும் 18ம் தேதி முதல் 29ம் தேதி வரை (24ம் தேதி தவிர) இவ்வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் - திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டி-திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதில் ரயில் எண் 22627 திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவில்பட்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே பிப்ரவரி 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டு திருச்சி கோவில்பட்டி இடையே மட்டும் இந்த நாட்களில் ரயில் இயக்கப்படும். இதனை போன்று ரயில் எண் 22628 திருவனந்தபுரம் சென்ட்ரல் திருச்சி - இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரம் சென்ட்ரல் - கோவில்பட்டி இடையே பிப்ரவரி 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28 மற்றும் 29 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் இந்நாட்களில் கோவில்பட்டி-திருச்சி இடையே மட்டும் இயக்கப்படும்.

ரயில் எண் 16191 தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் இருந்து வரும் பிப்ரவரி 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27 மற்றும் 28 தேதிகளில் புறப்படுவது திண்டுக்கல்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படுவது இந்த நாட்களில் தாம்பரம் -திண்டுக்கல் இடையே மட்டும் இயக்கப்படும். ரயில் எண் 16192 நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து பிப்ரவரி 18, 19, 20, 21, 22, 23, 25, 26, 27, 28 தேதிகளில் நாகர்கோவில் திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் இந்நாட்களில் திண்டுக்கலில் இருந்து புறப்பட்டு தாம்பரம் செல்லும். ரயில் எண் 16128 குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரங்கம்-வாலடி இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் வரும் 18ம் தேதி இந்த ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக ஓடும். இதனால் 18ம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தை அடைய 55 நிமிடங்கள் தாமதமாகும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Trichy Intercity Express ,Kovilpatti ,Thiruvananthapuram Central ,
× RELATED வாகன ஓட்டிகள் அவதி குண்டும் குழியுமான கோவில்பட்டி சாலை