×

தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி, பிப்.13: தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை:தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. முகாமில், ஸ்கைபுரோ நிறுவனம் தமிழ்நாடு கருவூல திட்டத்தின் தற்காலிக பணிக்காக பிஇ, எம்பிஏ கல்வி தகுதிகளை உடைய 50க்கும் மேற்பட்ட ஆண் மனுதாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். மனுதாரர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்கள், ஆதார் கார்டு, 5பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் முகாமிற்கு வர வேண்டும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.  அரசு துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும்.  எனவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் வரும் 18ம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Employment Camp ,
× RELATED தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்