×

தேவாரம் சாலையில் இயங்கிடும் டாஸ்மாக்கை இடமாற்ற வேண்டும் ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தேவாரம், பிப்.13: டி.ரெங்கநாதபுரம்-தேவாரம் சாலையில் இயங்கிடும் அரசு டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும் என்று ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேவாரம் அருகே டி.ரெங்கநாதபுரம் ஊராட்சி மன்ற கூட்டம் தலைவர் வசந்தி சிவசூரியன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் திருமலைராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தீர்மானங்களை ஊராட்சி செயலர் ஆனந்தன் வாசித்தார். தீர்மான விபரம்:

கிராமத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதுடன், இதனை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிப்பது, டி.ரெங்கநாதபுரம் கிராம ஊராட்சி செல்லும் சாலையில் இயங்கிடும் அரசு டாஸ்மாக் மதுபான கடையினால் மக்கள் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது. இங்கு குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதனை உடனடியாக தேனி மாவட்ட கலெக்டர் இடமாற்றம் செய்யவேண்டும்.
கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை உடனடியாக மேற்கொள்வதற்கு தேவையான நிதியை பெறுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,Panchayat ,Thevaram Road ,task force ,
× RELATED சிறப்பு ஊராட்சி கூட்டம்