அப்புறப்படுத்த கோரிக்கை தேசிய அளவிலான ஜூனியர் பிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டி

கரூர், பிப்.13: தேசிய அளவிலான ஜூனியர் பிஸ்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழ்நாடு சார்பில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் கோகுல் தேர்வாகியுள்ளார். இவர் தேசிய த்ரோபால் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேசிய அளவில் பல சாதனைகளை புரிந்துள்ள இவருக்கு கல்லூரி முதல்வர் முனைவர் கவுசல்யா தேவி, உடற்கல்வி இயக்குனர் முனைவர் ராஜேந்திரன், உடற்கல்வி பயிற்றுனர் சரவணன், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜன் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: