×

பைக் விபத்தில் மெக்கானிக் பலி

திருவெண்ணெய்நல்லூர், பிப். 12: திருவெண்ணெய்நல்லூர் அருகே காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு ஒரு மகன், 3 மகள்கள். மகன் விநாயகமூர்த்தி (24) விழுப்புரம் தனியார் பைக் ஷோரூமில் மெக்கானிக் வேலை செய்து வந்தார். தினந்தோறும் காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பணிக்கு செல்லும் அவர், இரவு 10 மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் விநாயகமூர்த்தி பணி முடிந்து வீட்டுக்கு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பேரங்கியூர் பேருந்து நிறுத்த சாலை வளைவில் அதே மார்க்கமாக சென்ற மற்றொரு பைக் சிக்னல் காட்டாமல் திடீரென வளையாம்பட்டு கிராமத்துக்கு திரும்பியது.

அப்போது விநாயகமூர்த்தி ஓட்டி சென்ற பைக் அந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்த விநாயகமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுபோன்று மற்றொரு பைக்கில் வந்த வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னராசு மகன் தமிழ்ச்செல்வன் (22) என்பவர் படுகாயம் அடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து நாகராஜ் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike accident ,
× RELATED சென்னையிலிருந்து மதுரை செல்ல...